அடுத்த பாப்பரசராகும் தகைமையுடையோருக்கான பட்டியலில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தும் உள்ளதாக பல சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி வொஷிங்டன் எக்ஸாமினர், பிலிப்பைன்ஸின் கர்தினால் லூயிஸ் டேகிள், பிரான்சின் கர்தினால் ஜீன்-மார்க் அவெலின் மற்றும் இத்தாலியின் கர்தினால் பியட்ரோ பரோலின் போன்ற முக்கிய இறைப்பணியாளர்களுடன் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
அத்துடன், யுஎஸ்ஏ டுடே இணையத்தளம், வெளியிட்டுள்ள பட்டியலில், இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் மேட்டியோ ஸுப்பி (Matteo Zuppi), கர்தினால்களான கெர்ஹார்ட் முல்லர் (Gerhard Müller), ரொபர்ட் சாரா (Robert Sarah) மற்றும் ரேமண்ட் ஆகியோர் அடங்கிய பட்டியலில் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தையும் குறிப்பிட்டுள்ளது.
Link: https://namathulk.com/
