ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலால் மிகவும் வருத்தமடைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவர் தனது உத்தியோகப்பூர்வ ஓ தளத்திலேயே இதனை கூறியுள்ளார்.
அத்துடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்திய மக்களுடனும் அரசாங்கத்துடனும் இலங்கை இருப்பதாகவும், ஒரு பிராந்தியமாக, பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் எதிர்ப்பதற்கு ஒன்றிணைந்து செயலாற்றுவோமெனவும் நாமல் வெளியிட்டுள்ள பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
Link: https://namathulk.com/
