கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று காலை வத்திக்கானுக்குப் புறப்பட்டார்.
போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக கார்டினல் ரஞ்சித் காலை 9.30 மணிக்கு கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முதல் லத்தீன் அமெரிக்கத் தலைவரான போப் பிரான்சிஸ், ஐந்து வாரங்களாக இரட்டை நிமோனியாவுடன் போராடி வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பிய ஒரு மாதத்திற்கும் குறைவான நேரத்தில், நிதிதிய இளைப்பாறினார்.
அவரது இறுதிச் சடங்கு, பெரும் கூட்டத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், போப் பிரான்சிசின் இறுதிச்சடங்கு ஏப்ரல் 26 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர் சதுக்கத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com/
