மன்னாரில் இருந்து கொழும்பு பேலியகொடை மொத்த விற்பனை மீன் சந்தைக்கு மீன்களை ஏற்றி வரும் லொறியில், மீன் பெட்டிகளுக்குள் மறைத்து வைத்திருந்த, 2 கிலோ ஜஸ் போதைப்பொருள் பொதிகளுடன் ஒருவர் குற்றத்தடுப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைபற்றிய போதைப்பொருட்களின் பெறுமதி 80 லட்சம் ரூபா என பொலிசார் கூறினர்.
இந்த நபர் மட்டக்குளி பிரதேசத்தில் உள்ள வீடமைப்புத் தொகுதியில் வாழும் 44 வயதுடையவராவார்.
குறித்த நபர் இவ்வாறு பல முறை போதைப்பொருட்களை கொழும்புக்கு கொண்டு சென்றுள்ளதாக பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Link: https://namathulk.com/
