யூடியூபர் கிருஷ்ணாவை பிணையில் செல்வதற்கு யாழ்ப்பாணம் – மல்லாகம் நீதிமன்றம் இன்றையதினம் அனுமதி வழங்கியது.
குறித்த யூடியூபர் சில்லாலை பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு சென்று அங்கிருந்த யுவதி ஒருவரை ஏளனம் செய்யும் விதத்தில் பேசியதுடன், கட்டாயப்படுத்தி காணொளியும் எடுத்து தனது யூடியூப்பில் பதிவேற்றியிருந்தார்.
குறித்த விடயமானது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் மீண்டும் சில்லாலைக்கு சென்றவேளை அங்கிருந்த இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைப்பட்டார்.
இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட இளவாலை பொலிஸார் அவரை கைது செய்து மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.
அத்துடன் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதற்கமைய தொடர்ச்சியாக மூன்று தடவைகள் வழக்கு நீதிமன்றத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதும் அவருக்கு பிணை மறுக்கப்பட்டு தொடர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இவ்வாறான நிலையில் அவருக்கு இன்றையதினம் பிணை வழங்கப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com/
