நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்சை கௌரவிக்கும் வகையில் எதிர்வரும் 26 ஆம் திகதி இலங்கையில் தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 26 ஆம் திகதி பரிசுத்த பாப்பரசரின் இறுதி ஆராதனைகள் வத்திகானில் நடைபெறவுள்ள நிலையில் , இலங்கையில் தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
உலக அமைதிக்கு ஆற்றிய பங்களிப்புகள் மற்றும் இலங்கைக்கு அவர் ஆற்றிய இரக்கமுள்ள பங்களிப்புகளுக்கு தேசத்தின் மரியாதையை பிரதிபலிக்கும் வகையில், பொது நிர்வாக அமைச்சினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
Link: https://namathulk.com/
