யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குருதி வங்கியில் , குருதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அனைத்து வகையான குருதி கூறுகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆர்வமுள்ள குருதி கொடையாளர்களிடம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குருதி வங்கி அவசர கோரிக்கையை முன்வைத்துள்ளது.
தினமும் காலை 07 மணி முதல் மாலை 06 மணி வரை குருதி வங்கிக்கு சமூகமளித்து , குருதி வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com/
