இராணுவ அதிகாரி ஒருவரை பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் திட்டிய சம்பவம் தொடர்பாக இலங்கை பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சம்பவம் தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட நிலையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன .
பதில் பொலிஸ் மாஅதிபரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.
கண்டி பிராந்திய பொறுப்பதிகாரி மேற்பார்வையின் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது.
விசாரணையின் முடிவின் அடிப்படையில், சம்பவத்தில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com/
