முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஏப்ரல் 28 ஆம் திகதி வாக்குமூலம் அளிக்க வரவுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார்.
தனது சட்டத்தரணியின் ஊடாக ஆணைக்குழுவிற்கு தகவல் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, அன்றைய தினம் பிற்பகல் 02.00 மணிக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுவதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தொடர்பில், ரணில் வழங்கிய விசேட அறிவிப்பு குறித்து வாக்குமூலம் பதிவு செய்ய ரணில் விக்ரமசிங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் அழைக்கப்பட்டுள்ளார்.
மாகாண சபையின் நிலையான வைப்பு நிதியை அரசு வங்கியில் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன-ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் கீழ், அவர் இராஜாங்க அமைச்சராக இருந்த முந்தைய பதவிக் காலம் தொடர்பான குற்றச்சாட்டுகளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணை செய்து வருகிறது.
Link: https://namathulk.com/
