ஹம்பாந்தோட்டை மித்தேனிய பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட மூன்று பேர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தேடப்பட்டு வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் சென்னையில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.
இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட சந்தேகநபர் , குற்றப் புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் 39 வயதுடைய தந்தை மற்றும் 09,06 வயதான மகள், மகன் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் உட்பட 10க்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
Link: https://namathulk.com/
