764 வழித்தட சிற்றூர்திகள் யாழ்ப்பாணத்திலிருந்து பலாலி வீதியூடாக காங்கேசன்துறை வரையில் சேவையில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் இந்த சேவை ஆரம்பிக்கப்படும் என வடக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் க.மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 769 வழித்தட சிற்றூர்திகள் யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை வீதியூடாக காங்கேசன்துறை வரையில் சேவையில் ஈடுபடும் என அவர் கூறியுள்ளார்.
கடந்த 10 ஆம் திகதி பலாலி வீதி திறக்கப்பட்ட நிலையில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுடன் நடைபெற்ற கலந்துரையாடலுக்கு அமைய, குறித்த வீதியில் பொது போக்குவரத்து சேவையை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.
Link: https://namathulk.com/
