சிறார்களின் ஆபாச காணொளிகளை தயாரித்த குற்றச்சாட்டில் புத்தளம் ஆனமடுவ பகுதியை சேர்ந்த 34 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள தேசிய காணாமல் போன மற்றும் சுரண்டப்பட்ட குழந்தைகள் மையத்தின் (NCMEC) அறிக்கையின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து அந்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் அதிகாரிகளால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் தொலைபேசி பழுதுபார்க்கும் நிலையத்தை நடத்தி வருவது கண்டறியப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டுமுதல் சமூக ஊடகங்கள் வழியாக வெளிநாட்டில் வசிக்கும் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சேகரித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த நபர் இலங்கையில் 13 வயது சிறார்களின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை உருவாக்கியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Link: https://namathulk.com/
