கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 29 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிசார் கூறினர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Link: https://namathulk.com/
