பஹல்காம் தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவத்தால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
பாகிஸ்தானுடனான தூதரக உறவை இந்தியா துண்டித்துள்ளது.
அத்துடன் சிந்து நதி ஒப்பந்தம் இரத்து, எல்லைகள் மூடல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதையடுத்து பாகிஸ்தானும் பதிலடியாக பல தடைகளை விதித்துள்ளது.
இதேவேளை இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான தி ரெசிஸ் டன்ஸ் பிரண்ட் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்த நிலையில் பஹல்காம் தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்திருந்த பாகிஸ்தான் இத்தாக்குதல் சம்பவம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது
Link: https://namathulk.com/
