உலகின் 1.4 பில்லியன் கத்தோலிக்க மக்களின் வாழும் தலைவரான நித்திய இளைப்பாறிய புனித பாப்பரசர் பிரான்சிஸின் இறுதி ஆராதனை நிகழ்வு வத்திக்கான் நேரப்படி காலை 10.00 மணிக்கு ஆரம்பமானது.
உலகளாவிய கத்தோலிக்க மதத்தின் பிரதான தேவாலயமான வத்திக்கானில் உள்ள புனித பீட்டர்ஸ் பெசிலிக்காவின் திறந்தவெளி முற்றத்தில் இந்த இறுதி ஆராதனை நிகழ்வு இடம்பெறுகிறது.
இறுதி ஆராதனை நிகழ்வை வத்திக்கானின் சிரேஸ்ட பதவிகளில் ஒன்றான கேமர்லெக்னோ பதவியை வகிக்கும் கார்டினல் கெவின் ஃபாரெல் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பிரித்தானிய இளவரசர் வில்லியம்ஸ் உட்பட பல உலகத் தலைவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.
இலட்சக்கணக்கான கத்தோலிக்க மக்கள் தங்கள் அன்புக்குரிய தலைவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வத்திக்கானில் திரண்டுள்ளனர்.
Link: https://namathulk.com/
