கந்தபளை புதிய வீதி பகுதியில், மரக்கறி தோட்டத்தை காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக, பாதுகாப்பு வேலியில் இணைக்கப்பட்ட மின்சார இணைப்பில் சிக்கி இன்று காலை முதியவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் கந்தபளை புதிய வீதி பகுதியைச் சேர்ந்த செல்லப்பெருமாள் என்ற முதியவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த முதியவர் நீண்ட காலமாக, விவசாயத் தோட்டத்தில் தற்காலிக குடிசை ஒன்றினை அமைத்து தங்கியிருந்து தினமும் தொழில் புரிந்து வந்தவர் எனவும் வழக்கம் போல் இன்று தொழில் செய்வதற்கு காலை விவசாயச தோட்டத்திற்கு சென்றதாகவும் அருகில் வசிப்பவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசாருடன் நுவரெலியா தடயவியல் பொலிசார் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.
Link: https://namathulk.com/
