ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை தொடர்பான நிபந்தனைகள் குறித்த முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்புக் குழுவொன்று இன்று (28) இலங்கைக்கு வருகை தரவுள்ளது.
அதன்படி, ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்புக் குழு எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கண்காணிப்புக் குழு இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உட்பட அரசியல் தலைவர்கள், எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள், சிவில், வணிக மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் என பல தரப்பினரையும் சந்தித்து பரந்துபட்ட கலந்ர்துரையாடல்களை முன்னெடுக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com/
