சமூக நீதியை உண்மையாகக் கடைப்பிடிக்கும் ஒரு அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமையடைவதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.
இவர் தனது உத்தியோகப்பூர்வ முகநூல் பக்கத்தியேயே இதனை கூறினார்.
கண்டியில் நடந்த புனித பல் நினைவுச்சின்ன கண்காட்சியில், நகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்காக விசேட விஐபி வரிசை ஏற்பாடு செய்யப்பட்டமையை பாராட்டும் முகமாக அவர் இதனை பதிவிட்டுள்ளார்.
கண்ணியம், நியாயம் மற்றும் இரக்கம் கொண்ட ஒரு இலங்கையை உருவாக்குவோம் எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.
அத்துடன், உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களால் மிகவும் மதிக்கப்படும், சிறி தலதா வழிப்பாடு நேற்றோடு நிறைவடைந்நதமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சிறி தலதா வழிபாட்டு நிகழ்விற்கு இணையாக, க்ளீன் ஸ்ரீலங்கா வழிநடத்தலுடன் கண்டி நகரத்தை சுத்தப்படுத்தும் நிகழ்வு தரிசிக்க வந்தவர்கள், அப்பகுதி நிறுவனத்தினரின் சிரமப் பங்களிப்புடன் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
இதற்கு ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ செயலக அதிகாரிகளும், இளைஞர்கள் மற்றும் சிரேஷ்ட பிரஜைகளைக் கொண்ட பல தன்னார்வக் குழுக்களும் தமது பங்களிப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
இன்று முழு கண்டி நகரம் முழுவதிலும் முன்னெடுக்கப்படவிருக்கும் தூய்மைப்படுத்தல் பணிக்கு க்ளீன் ஸ்ரீலங்கா குழுவினர் தயாராக உள்ளனர்.
கழிவுகளை முறையாக அகற்றுவதற்கான மனப்பான்மையை மக்களிடையே ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தத் திட்டத்திற்கு, வெற்றிகரமாக்க பொதுமக்களின் ஆதரவு குறைவின்றிக் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com/
