இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 46ஆவது போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இதனையடுத்து 163 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றி இலக்கை கடந்தது.
இதற்கமைய புள்ளிப்பட்டியலில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதேவேளை குஜராத் டைடன்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் ஆகிய அணிகள் 12 புள்ளிகளுடன் முறையே 2ஆம், 3ஆம், 4ஆம் இடங்களைப் பெற்றுள்ளன.
பஞ்சாப் கிங்ஸ் அணி 11 புள்ளிகளுடன் 5ஆவது இடத்திலும், லக்னோ அணி 10 புள்ளிகளுடன் 6ஆவது இடத்திலும் காணப்படுகின்றது.
கொகால்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 புள்ளிகளுடன் 7ஆவது இடத்திலும், சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 6 புள்ளிகளுடன் 8ஆவது இடத்திலும் காணப்படும் அதேவேளை, ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் சென்னை சுப்பர் கிங்கள் அணிகள் 4 புள்ளிளுடன் முறையே 9 மற்றும் 10ஆம் இடங்களில் காணப்படுகின்றன.
Link: https://namathulk.com/
