கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
2023 ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் அமைப்பினர் அந்நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்தியதில் இருந்து இஸ்ரேல், காசா, ராஃபா உள்ளிட்ட நகரங்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் நிறுத்தம் கடந்த மார்ச் மாதம் 1ஆம் திகதி முடிவுக்கு வந்ததை அடுத்து மீண்டும் போர் தொடங்கியுள்ளது.
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
அதேநேரத்தில், லெபனானிலும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
மேலும் கடந்த 24 மணிநேரத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 51 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
காசாவின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுவரையில் 117, 600ற்கும் மேற்பட்டோர் போரில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com/
