முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் இலஞ்ச ஊழல்ஆணைக்குழுவில் இருந்து வெளியேறினார்.
நிதி மோசடி குற்றச்சாட்டில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மீதான விசேட வாக்குமூலம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்ய ரணில் விக்ரமசிங்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜரானார்.
தனது வாக்குமூலத்தை பதிவு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் ஜனாதிபதியின் சட்டத்தரணி, ரணில் விக்ரமசிங்க இன்று லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் 10 பக்க வாக்குமூலம் அளித்ததாக தெரிவித்தார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிலிருந்து சம்மன் பெற்ற பின்னர் முன்னாள் ஜனாதிபதி அறிக்கை அளித்ததாக சட்டத்தரணி கூறினார்.
Link: https://namathulk.com/
