புதிய பாப்பரசரை தேர்ந்தெடுப்பதற்கான மாநாட்டை எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதி ஆரம்பிக்க ரோமில் உள்ள கர்தினால்கள் இணக்கம் தெரிவித்ததாக வத்திக்கான் இன்று (28) அறிவித்துள்ளது.
இன்று காலை வத்திக்கானின் சினோட் மண்டபத்தில் நடைபெற்ற ஐந்தாவது பொது சபைக் கூட்டத்தில் கர்தினால்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
இந்த மாநாடு வத்திக்கானின் சிஸ்டைன் பேராலயத்தில் நடைபெறும் என்பதோடு அதற்கு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை பாப்பரசர் தேர்தலுக்கு தகுதி பெற்ற கர்தினால்களின் எண்ணிக்கை 135 ஆகும்.
அவர்களில் 53 கர்தினால்கள் ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள், 23 பேர் ஆசியாவைச் சேர்ந்தவர்கள், 20 பேர் வட அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள், 18 பேர் ஆபிரிக்காவைச் சேர்ந்தவர்கள், 17 பேர் தென் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஓசியானியாவைச் சேர்ந்த 4 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
உலகம் முழுவதிலுமிருந்து 71 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாப்பரசர் தேர்தலுக்கு வரும் கர்தினால்கள் 80 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும்.
வத்திக்கானில் உள்ள சிஸ்டைன் தேவாலயத்தில் நடைபெறும் இந்த வாக்கெடுப்பு, பூமியில் மிகவும் இரகசியமான வாக்கெடுப்பாக கருதப்படுகிறது.
Link: https://namathulk.com/
