ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள ஒரு தொகை சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது

Aarani Editor
1 Min Read
கைது

இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்ட ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள சிகரெட் தொகையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய வியாபாரி ஒருவராவார்.

இவர் இன்று (28) காலை 8:35 மணியளவில் டுபாயிலிருந்து விமானம் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் இலங்கை சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, சந்தேக நபர் கொண்டு வந்த 8 பயணப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 83,600 சிகரெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த சிகரெட் தொகையின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகம் என சுங்க அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

Link: https://namathulk.com/

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *