கொழும்பு மாநகரசபை மக்கள் சார்பில் சிந்திப்பதில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
இதன்போது, கொழும்பு மாநகர சபையின் வருடாந்த வருமானம் 30 பில்லியன் ரூபா எனவும் பிரதமர் தெரிவித்தார்.
கொழும்பில் ஒரு வசதிபடைத்த மாநகரசபை உள்ள போதிலும், மக்கள் பற்றிய எவ்வித உணர்வும் இல்லாமல் இருப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், முன்பள்ளியை நகர சபையிடம் ஒப்படைத்தது போலவே, நாட்டில் கல்வியை தேசிய அளவில் கட்டியெழுப்ப பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் இதன்போது கூறினார்.
Link: https://namathulk.com/
