நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இஸ்கிராப் தோட்டத்தில் பெரும்பாலான தாழ் நில பிரதேசங்களில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
வெள்ள நீர் முழுமையாக வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இதனால் 16 குடும்பங்களைச் சேர்ந்த 61 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தோட்ட ஆலயத்தில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
வெள்ளம் புகுந்த பல வீடுகளில் மக்கள் வசிக்க முடியாத நிலையே காணப்படுகிறது.
மேலும் குடும்ப வருமானத்திற்காக விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த அதிகமானோர் மழை காரணமாகவும், வெள்ளம் காரணமாக தனது தோட்டங்களில் பயிரிடப்பட்ட மரக்கறி வகைகள் அனைத்தும் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்டதால் பாரிய நட்டத்துடன் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
Link: https://namathulk.com/
