பொது-தனியார்-மக்கள் கூட்டாண்மை என்ற 4P கருத்தின்படி செயல்படுத்தப்பட முன்மொழியப்பட்ட ஒரு பெரிய அளவிலான திட்டமாகத் க்ளீன் ஸ்ரீலங்கா செயற்பாட்டில் இது திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்றது.
திட்டம் தொடர்பான தொழில்நுட்ப சிக்கல்களுக்கான தீர்வு மற்றும் நிலத்தை விடுவிப்பதற்குத் தேவையான அடிப்படை சிக்கல்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.
நமது நாட்டின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் பொதுமக்கள், அரசு மற்றும் தனியார் துறையின் பொறுப்பை நினைவுபடுத்தும் வகையில் “க்ளீன் ஸ்ரீலங்கா ” திட்டத்தின் கீழ் அடுத்த ஆண்டு தனியார் துறையின் பங்களிப்புடன் வனப்பகுதியை விரிவுபடுத்தவும் இயற்கை சூழலைப் பாதுகாக்கவும் பல உற்பத்தித் திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.






Link: https://namathulk.com/
