காஷ்மீர் – பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொள்ளப்பட்டமைக்கு பதிலடியாக,பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்தியப் பிரதமர் மோடி அனுமதி வழங்கியுள்ளார்.
அதற்கமைய எப்போது, எங்கு தாக்குதல்களை நடத்துவது என்பதை தீர்மானிப்பதற்காக நாட்டின் பாதுகாப்புப் படைகளுக்கு முழுமையான செயல்பாட்டு சுதந்திரத்தை இந்தியப் பிரதமர் வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புது டில்லியில் நேற்று நடைபெற்ற தேசிய பாதுகாப்பு பேரவையின் விசேட கூட்டத்தில் இந்தியப் பிரதமர் இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.
இந்திய இராணுவத் தளபதிகள் மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதற்கிடையில், அடுத்த 24 முதல் 36 மணி நேரத்திற்குள் இந்தியா இராணுவத் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், இந்தியாவின் எந்தவொரு இராணுவ நடடிக்கைக்கு உறுதியுடனும் தீர்க்கமாகவும் பதிலளிக்கப்படும் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
Link: https://namathulk.com/
