இலங்கைக்கான சுவிஸ் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் , பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் நான்கரை மில்லியன் ரூபா பெறுமதியான இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட நகைகள் திருடப்பட்டுள்ளன.
தங்க மோதிரங்கள், கழுத்து மாலைகள் மற்றும் பதக்கங்கள் உள்ளிட்ட ஆபரணங்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுவிட்சர்லாந்திற்கான இலங்கைத் தூதுவர் , கடந்த 12 ஆம் திகதி சுவிட்சர்லாந்துக்குப் புறப்பட்டு, 27 ஆம் திகதி இலங்கைக்குத் திரும்பியுள்ளார்.
இந்தக் காலகட்டத்தில், ஐந்து ஊழியர்கள் பணியில் இருந்ததாக சுவிஸ் தூதுவர் பொலிஸ் நிலையத்தில் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, குறித்த ஊழியர்களிடம் பொலிசார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Link: https://namathulk.com/
