பாகிஸ்தானிய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் அனைத்து விமானங்களுக்கும் இந்திய வான்வெளியில் நுழைவதற்கு இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை இந்திய மத்திய அரசு எடுத்து வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியைப் பயன்படுத்த தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட விமானங்களுக்கும், பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களால் இயக்கப்படும், சொந்தமான அல்லது குத்தகைக்கு விடப்பட்ட விமானங்களுக்கும் இந்திய வான்வெளியில் நுழைவதற்கு இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது.
இந்தத் தடை பாகிஸ்தான் இராணுவ விமானங்களுக்கும் பொருந்தும்.
இந்தியா, பாகிஸ்தான் இடையே நேரடி விமானங்கள் இல்லை.
சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிற கிழக்கு ஆசிய நாடுகளுக்கான விமானங்களுக்கு பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் இந்திய வான்வெளியைப் பயன்படுத்தி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com/
