சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட பல பிரதான கட்சிகள் கொழும்பில் தமது மே தின பேரணி மற்றும் கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன.
இதற்கமைய, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் நாளை மாலை 3.30 க்கு கொழும்பு காலி முகத்திடலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டம், கட்சியின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தலைமையில் நாளை மாலை 2 மணியளவில் நுகேகொட ஆனந்த சமரகோன் வெளியக அரங்கில் நடைபெறவுள்ளதாக கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
Link: https://namathulk.com/
