உழைக்கும் மக்களின் வியர்வை, இரத்தம் மற்றும் உயிர்த் தியாகங்கள் நிறைந்த வேதனையான வரலாற்றை முடிவுக்குக் கொண்டு வந்து ஒரு வெற்றி ஆண்டில் ஒரு மக்கள் அரசாங்கத்தின் கீழ் 139வது சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகிறோம்.
அரச, தனியார், தொழில் முயற்சியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட அனைத்து உழைக்கும் வர்க்கத்தின் பொருளாதார சக்திகளையும் வலுப்படுத்த அரசாங்கம் ஒரு முறையான வேலைத்திட்டத்தைத் தயாரித்துள்ளது.
மக்களின் பாதுகாப்பு, சுதந்திரம் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், மிகவும் ஸ்திரமான மற்றும் நம்பகமான எதிர்காலத்தை அடைவதற்கு நாம் ஒன்றிணைந்து நம்மை அர்ப்பணிக்க வேண்டும்
நாம் வென்றெடுத்த உரிமைகளைப் பாதுகாத்து, நாட்டைக் கட்டியெழுப்ப உறுதியுடன் ஒன்றிணைந்து உழைப்போம்.
Link: https://namathulk.com/
