முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் தலைமையகத்தால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, விக்கிரமசிங்கவின் பிரதான தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய அசோக அரியவன்ச, காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த இடமாற்றத்திற்கு தேசிய பொலிஸ் ஆணைக்கழுவின் ஒப்புதல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.
ஆரியவன்ச, விக்கிரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவில் 23 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
இதில் 15 ஆண்டுகள் விக்ரமசிங்கவின் பிரதான தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக இருந்தார்.
Link: https://namathulk.com/
