சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாட்டில் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் நடத்தும் மே தின பேரணிகள் தற்போது ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றன.
தற்போதைய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தி மே தினக் கூட்டம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் காலி முகத்திடலில் நடைபெற்று வருகிறது.
மேலும், பிரதான எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம், அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் தலவாக்கலை லிந்துல நகரசபை மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தின பேரணி நுகேகொட ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் இடம்பெறுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணியின் மே தினக் கூட்டம் சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது.
இதற்கிடையில்இ சர்வஜன அதிகாரம் ஏற்பாடு செய்த மே தின பேரணி அக்கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தலைமையில் வரகாபொலயில் நடைபெற்றது.
Link: https://namathulk.com/
