சமீபத்தில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்திற்கு பதிலளித்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, எதிர்காலத்தில் மின்சார கட்டணங்களை உயர்த்தும் வாய்ப்பு இல்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தினட் இலங்கை பணிக்குழு தலைவர் இவான் பாபஜியோர்ஜியூ, நட்டமின்றி மின் உற்பத்தி செலவுகளை மீட்டெடுக்கும் கட்டணத் திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், இது சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவித் திட்டத்தின் நான்காவது மதிப்பீட்டுக்காக அவசியம் எனவும் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் முகமாக, பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ மின்சார கட்டணங்களை உயர்த்த வேண்டிய கட்டாயம் இல்லை எனவும், மின் உற்பத்தி செலவுகள் உயரும் போது மட்டுமே கட்டண உயர்வு ஏற்படும் எனவும் கூறினார்.
மேலும், கடந்த காலத்தில் அந்த செலவுகள் முறையாக வசூலிக்கப்படவில்லை என்பதையே சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது என பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
Link: https://namathulk.com/
