CONVICTION என ஆங்கில தலைப்பிட்ட கடிதத்தின் செயற்பாடுகள் பற்றி பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு பொலிசார் கடும் எச்சரிக்கை.

Aarani Editor
1 Min Read
CONVICTION

பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் ‘கணினி குற்றத் தலைமையகம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ள போலி கையொப்பத்துடன் “நம்பிக்கை வைத்தல் (CONVICTION)” என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட போலி கடிதம் குறித்து பொதுமக்களுக்கு மீண்டும் தெளிவூட்ட பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

“Cyber Crime Headquarters Colombo, Sri lanka” என்ற முகவரி இடப்பட்ட குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனம் இலங்கையில் இல்லை என்றும், இங்கு கூறப்பட்டுள்ள நிலைப்பாடுகள் அல்லது விடயங்கள் இலங்கை பொலிஸாரால் வெளியிடப்படவில்லை என்றும், அவை தவறானவை மற்றும் திரிபுபடுத்தப்பட்டவை என்றும் பொலிஸ் ஊடகப்பிரிவு பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளது.

மேலே குறிப்பிடப்பட்ட “CONVICTION” என்ற ஆங்கிலக் கடிதத்தைப் பயன்படுத்தி பணம் கேட்டு பொதுமக்களை தவறாக வழிநடத்தி, அவர்களை சிரமத்திற்கு உள்ளாக்குவதாக தற்போது தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, மேற்படி கடிதத்தின் அடிப்படையில் எந்தப் பணத்தையும் அனுப்ப வேண்டாம் என்றும், தவறான தகவல்களைப் பரப்புவதில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகத் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Link: https://namathulk.com/

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *