தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் கொழும்பு – காலி முகத்திடலில் இடம்பெற்றது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில்இ ‘நாட்டைக் கட்டியெழுப்பும் மக்கள் சக்தி அணிதிரளும் என்ற தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் மே தின நிகழ்வுகள் நடைபெற்றன.
இதன்போது, தேசிய மக்கள் சக்தியின் தலைவர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரையாற்றினார்.
மக்களின் எதிர்காலம், நாட்டின் எதிர்காலம் தொடர்பில் சிந்திக்கும் ஒரே கட்சி தேசிய மக்கள் சக்தி மாத்திரமே
பல காலமாக இருந்த அரசியல் வியாபாரம் இன்று இல்லாமல் ஒழிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பரம்பரை அடிப்படையிலான ஆட்சிமுறைகளினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படனர்.
ஆனால் தற்போது இவ்வாறான ஆட்சிமுறை இல்லாதொழிக்கப்பட்டு மக்கள் ஆட்சி நிறுவப்பட்டுள்ளது.
ஆட்சியாளர்களுக்கான வரப்பிரசாதங்கள் எமது ஆட்சியில் ஒழிக்கப்பட்டு மக்களுக்கானவை மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
நீதி அனைவருக்கும் சமமாக செயற்படுத்தப்படுகின்றது.
Link: https://namathulk.com/
