சிலாபம், தெதுரு ஓயாவில் குளித்துக் கொண்டிருந்த 20 மற்றும் 22 வயதுடைய இரண்டு இளைஞர்கள் நேற்று காணாமல் போனதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
கட்டுகஸ்தோட்டை மற்றும் கலகெதர பகுதியைச் சேர்ந்த இந்த இரண்டு நபர்களும் நேற்று மாலை காணாமல் போனதாக பொலிசார் தெரிவித்தனர்.
நண்பர்கள் குழுவுடன் இருவரும் கண்டியிலிருந்து சிலாபத்திற்கு ஒரு பொழுதுபோக்கு பயணமாக அந்தப் பகுதிக்குச் சென்றிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காணாமல் போன இரண்டு இளைஞர்களைக் கண்டுபிடிக்க சிலாபம் பொலிசார், இலங்கை கடற்படையுடன் இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்
