சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் பொறியியல் தொழில்நுட்ப பிரிவின் இரண்டாம் ஆண்டு மாணவர் உயிரிழந்த சம்பவம் சமூகப் பிணைப்புகளில் ஏற்பட்டுள்ள முறிவை எடுத்துக்காட்டுவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கல்வி அமைச்சும், பொலிசாரும் தனித்தனியாக இந்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பிரதமர் கூறியுள்ளார்.
இது போன்ற சம்பவங்கள் சமூகத்திற்கும் பல்கலைக்கழக முறைமைக்கும் இடையிலான பிணைப்புகளில் ஏற்பட்டுள்ள முறிவைக் எடுத்துக்காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையை மாற்ற வேண்டும் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Link: https://namathulk.com/
