சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பரிந்துரைகளுக்கு ஏற்ப செலவு-பிரதிபலிப்பு விலை நிர்ணயம் தேவை என்பதை மேற்கோள் காட்டி, ஜூன் மாதத்தில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் தெரிவித்துள்ளார்.
தேசிய ஊடகம் ஒன்றில் நேற்றிரவு ஒளிபரபாகிய விசேட நேர்காணல் நிகழ்வில் கலந்துக்கொண்ட போதே ஜனாதிபதி இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இலங்கை மின்சார சபைக்கு (CEB) மானியம் வழங்க முடியாது என ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.
உண்மையான உற்பத்தி செலவுகளுக்கு ஏற்ப மின்சாரம் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் எரிசக்தி இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய ஜனாதிபதி , அது தேசிய பாதுகாப்பிற்கு ஒருங்கிணைந்ததாகும் என கூறியுள்ளார்.
Link: https://namathulk.com/
