அவுஸ்திரேலிய பொதுத் தேர்தலில், இலங்கையில் பிறந்த கசாண்ட்ரா பெர்னாண்டோ மீண்டும் வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் நேற்றையதினம் சனிக்கிழமை பொதுத் தேர்தல் நடைபெற்றது.
பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சியின் ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்த நிலையில் நேற்றையதினம் தேர்தல் இடம்பெற்றிருந்தது.
முன்னதாக பிரதமர் அந்தோணி அல்பனீஸ், வீட்டுவசதி பற்றாக்குறையை நிவர்த்திக்க அடுத்த 5 ஆண்டுகளில் 12 இலட்சம் வீடுகள் கட்டப்படும் என கடந்த 2023 ஆம் ஆண்டு உறுதியளித்தார்.
ஆனால் அது தொடர்பான நடவடிக்கைகள் வேகமாக மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சிக்கு இந்த தேர்தல் பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் பெரும்பான்மையை பெற்று தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இதேவேளை மீண்டும் வெற்றி பெற்றுள்ள இலங்கைப் பெண் கசாண்ட்ரா பெர்னாண்டோ தனது அணியுடன் நேற்றையதினம் வெற்றியைக் கொண்டாடியுள்ளார்.
அதன்போது கருத்து தெரிவித்த கசாண்ட்ரா பெர்னாண்டோ கண்ணீர்மல்க அவரது குழு உறுப்பினர்களுக்கும் பொது மக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
link: https://namathulk.com/
