நாட்டில் குற்றங்களைச் செய்து வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற 20க்கும் மேற்பட்ட நபர்களை திருப்பி அனுப்பும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்கள் தற்போது துபாய், இந்தியா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளில் வசித்து வருவதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அவர்களை மீண்டும் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
சமீபத்திய வாரங்களில், பல பாதாள உலகக் குற்றவாளிகள் ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Link: https://namathulk.com/
