தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சென்னை சூப்பர் கிங்ஸ்.

Aarani Editor
1 Min Read
ChennaiSuperKings

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களைப் பெற்றது.

அணி சார்பில் அஜிங்க்யா ரஹானே அதிகபட்சமாக 48 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

தொடர்ந்து 180 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 19.4 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து, 183 ஓட்டங்களைப் பெற்று போட்டியில் வெற்றி பெற்றது.

அணி சார்பில் டெவால்ட் பிரெவிஸ் அதிகபட்சமாக 52 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *