பாகிஸ்தானின் இருபதுக்கு 20 கிரிக்கெட் லீக் போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மாற்றப்படும் என்று பாகிஸ்தானிய கிரிக்கட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராவல்பிண்டி மைதானத்துக்கு அருகில் இந்திய ட்ரோன் ஒன்று வீழ்ந்து வெடித்தமையை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களை குறிவைத்து வேண்டுமென்றே செய்யப்பட்ட முயற்சி என்று பாகிஸ்தானிய வெளியுறவு அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தநிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மாற்றப்பட்டுள்ளன என்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையும் உறுதிப்படுத்தியுள்ளது.
வீரர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலையும் விளையாட்டுகளையும் பிரித்து வைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எப்போதும் பாகிஸ்தான் உறுதியாக இருந்து வருகிறது.
இருப்பினும் மைதானத்தை குறிவைத்து இந்தியா நடத்திய தாக்குதல் மிகவும் பொறுப்பற்றது என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
முன்னதாக முன்னாள் செம்பியன்களான கராச்சி கிங்ஸ் மற்றும் பெசாவர் ஸல்மி ஆகிய அணிகள் நேற்றையதினம் ராவல்பிண்டி மைதானத்தில் விளையாடவிருந்தன.
ஆனால் இந்தியாவின் ட்ரோன் ஒன்று மைதானத்திற்கு அருகில் விழுந்ததால் போட்டி ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
link: https://namathulk.com/
