உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பெறுபேறுகளுக்கு அமைய, அந்தந்த பதவிகளுக்கு நியமிக்கப்படவுள்ளவர்களை பெயரிட்டு ஒருவாரத்துக்குள் அனுப்பி வைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுஇ அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களை அறிவுறுத்தியுள்ளது.
ஒரு கட்சியினால் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரம் பெறப்படாத சபைகளின் பதவி நிலைகள்
அதற்கு பொறுப்பான ஆணையாளரால் நியமிக்கப்பட வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளைஇ நடைபெற்று முடிந்த தேர்தல் பெறுபேறுகளுக்கு அமைய கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பது குறித்துஇ குழப்பகரமான சூழ்நிலை நிலவுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏனைய கட்சிகளுடன் இணைந்து அங்கு ஆட்சியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
கொழும்பு மாநகரசபையில் தேசிய மக்கள் சக்தி 48 உறுப்பினர்களை வென்றுள்ளது.
அங்கு ஐக்கிய மக்கள் சக்தி 29 உறுப்பினர்களுடன் ஏனைய கட்சிகள் மொத்தமாக 69 உறுப்பினர்களைக் கொண்டுள்ளன.
எவ்வாறாயினும்இ நேற்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸஇ கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைக்கும் அதிகாரம் தேசிய மக்கள் சக்திக்கே இருப்பதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
link: https://namathulk.com/
