வெசாக் பௌர்ணமி போயா தினத்தை முன்னிட்டு, உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மே 12ஆம் திகதி முதல் மே 14ஆம் திகதி வரை மூடப்பட வேண்டும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, மே மாதம் 11 ஆம் திகதி இரவு மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படும் நேரத்திலிருந்து மே மாதம் 15 ஆம் திகதி திறக்கப்படும் நேரம் வரை நாட்டிலுள்ள அனைத்து உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட வேண்டும் என்று
மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் உதய குமார பெரேரா கையெழுத்திட்டுள்ள அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு;ள்ளது.
அந்தக் காலகட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் மது, போதைப்பொருள் மற்றும் புகையிலை தொடர்புடைய குற்றங்களைத் தடுப்பதற்கான சுற்றிவளைப்புக்களை மேற்கொள்வதற்கு பெரிதும் உதவியாக அமையும் என மதுவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
link: https://namathulk.com/
