அரசியலமைப்பு சபையின் செயலாளர் பதவியிலிருந்து தம்மிக்க தசநாயக்க விலகல்

Aarani Editor
1 Min Read
dhambika dhsanayake

அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக, எதிர்வரும் 15ஆம் திகதி முதல் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அரசியலமைப்பு சபைக்கு அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதன்படி, அவரது இராஜினாமாவை அந்த சபை ஏற்றுக்கொண்டதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன

பாராளுமன்றச் செயலாளர் நாயகமாகப் பணியாற்றிய தம்மிக்க தசநாயக்க, 25, மே 2023 அன்று அந்தப் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.

இருப்பினும், பின்னர் அதே ஆண்டில் அரசியலமைப்பு சபையின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

அரசியலமைப்பு சபையின் செயலாளர் பதவிக்காக அவருக்கு சுமார் 500,000 ரூபாய் கொடுப்பனவும், ஒரு உத்தியோகபூர்வ வாகனமும் பிற வசதிகளும் வழங்கப்பட்டன

link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *