கொழும்பிலுள்ள வொக்ஷோல் வீதியிலுள்ள உணவகத்திலும் அருகிலுள்ள கட்டடத்திலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்படி தீயைக் கட்டுப்படுத்த 5 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில், மின் கசிவுவால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதேவேளை கொழும்பு ஆமர்வீதியில் உள்ள களஞ்சியசாலையொன்றில் தீப்பரவல் எற்பட்டுள்ளது.
குறித்த தீயைக் கட்டுப்படுத்த இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது
link: https://namathulk.com/
