கனடா பிரம்டனில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி திறக்கப்பட்டுள்ளமை எங்கள் கூட்டு வரலாற்றில் முக்கியமான ஒரு தருணமாகும் என கனடாவின் நீதியமைச்சர் கரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழின அழிப்பால் உயிரிழந்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி, இன்றைய தினம் கனடா பிரம்டன் நகரில் சிங்காவுசி பூங்காவில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
தமிழின அழிப்பு நினைவகம் என்ற பெயரில் அமைந்துள்ள இந்த நினைவுத்தூபியை பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுண் திரைச்சீலை நீக்கி உத்தியோகபூர்வமாக இன்றைய தினம் திறந்து வைத்துள்ளார்.
இந்த நிகழ்வில் அரசியல்வாதிகள் உட்பட புலம்பெயர் அமைப்புக்களின் பிரிதிநிதிகள் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டருந்தனர்.
Link: https://namathulk.com/
