காஷ்மீர் பிரச்சனையில் எந்த நாட்டின் மத்தியஸ்தமும் அவசியம் இல்லை என இந்திய மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் ஒபரேஷன் சிந்தூர் இன்னமும் முடிய வில்லை எனவும் இந்தியா அறிவித்துள்ளது.
அதே நேரத்தில் எந்த சூழலிலும் தாக்குதல் நடத்த இந்திய இராணுவத்துக்கு முழு அதிகாரமும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காஷ்மீர் பிரச்சினைக்கு மத்தியஸ்தம் செய்ய தயார் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறி இருந்தார்.
அவரின் அறிவிப்பு, உலக நாடுகள் இடையே விவாதமாக மாறி உள்ளது.
இந்நிலையில் காஷ்மீர் பிரச்சனையில் எந்த நாட்டின் மத்தியஸ்தமும் அவசியம் இல்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளதாக இந்திய மத்திய அரசு தரப்பில் இருந்து உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
காஷ்மீர் விவகாரத்தில் தங்களுக்கு தெளிவான நிலைப்பாடு உள்ளதாக இந்தியாவின் மத்திய அரசு கூறியுள்ளது.
அத்துடன், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரை மீட்பது மட்டும் தான் எஞ்சியுள்ளது இதில் இன்னொரு நாடு பேசுவதற்கு வேறு எதுவும் இல்லை எனவும் இந்தியா தெரிவித்துள்ளது.
Link: https://namathulk.com/
