தனது 14 ஆண்டுகால டெஸ்ட் பயணம் முடிவுக்கு வருவதாக இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி உருக்கமுடன் அறிவித்துள்ளார்.
அவர் தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளத்தில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
36 வயதான விராட் கோலி கடந்தாண்டு இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெற்றார்.
கோலியின் தலைமையில், இந்திய அணி முதல்முறையாக அவுஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்திருந்தது.
டெஸ்ட் போட்டிகளில், இந்திய அணிக்காக அதிக வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த அணித்தலைவர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார்.
123 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 30 சதங்கள், 7 இரட்டைச் சதங்களைப் பதிவு செய்துள்ளார்.
மேலும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 9,230 ஓட்டங்களை விராட் கோலி குவித்துள்ளார்.
இந்தநிலையில் விரைவில் 10,000 ஓட்டங்களைக் கடந்து சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஒய்வை அறிவித்துள்ளார்.
Link: https://namathulk.com/
